Tuesday, July 5, 2011

சுயம்

விழிஎன்ற கிணற்றின் விளிம்பில்
நீர் தளும்பி கொண்டே இருந்தது
மிதித்தால் மரித்தது கொடி
 

மௌனம் --
வழியாகி போனது , ஏறத்தாழ
குறுஞ்சி பூக்கும் காலம்
தளிர்த்தது துளிர்
பிறர் கூறி தன பலம்
அறிந்தான் அனுமான்
என் பலம் எனை உணர
பாலம் அமைத்த அணிலே
நன்றி ! -- சுயமாய் நான் .



- சோனா கிரண்

---நட்பு

எப்போதும் கரம் பிடித்து 
கூடவே பாதுகாப்பாக 
அழைத்து செல்லும் நட்பில் 
உடன்பாடில்லை 
உன்னை போலவே எனக்கும் . 

கை தூக்கிவிட்டு 
நான் நானாய் 
சுயமாய் 
வழி நடந்து செல்ல 
உதவும் நட்பையே விரும்புகிறேன் , 
நானும் உன்னை போலவே .

 கட்டுபடுத்தவும் , 

கட்டுப்படுத்தபடுவதையும் 
விரும்புவதில்லை . 

சுதந்திரமாக நீயும் நானும் , 
உனக்கென்ற நட்பு வட்டத்தில் 
நீயும் எனக்கென்ற நட்பு வட்டத்தில் நானும் .

 நமக்கான நட்பு நம்மில் 

கண்ணுக்கு தெரியாத மெல்லிய நூலால் 
உறுதியாக கட்டப்பட்டிருகிறது .
சுதந்திரமாய் நீயும் நானும் ---புரிதலின் மொழி மௌனமாய் !


நட்பென்ற வானம் பெரிது .

வெவ்வேறு திசையில் பறந்தாலும் 
சிறகொடிந்த நிலை உணர்ந்தால் 
நீ என்னிடமும் ,
நான் உன்னிடமும் -- பறப்பதை நிறுத்தி 
சேர்ந்து ஒரு மரகிளையில் இளைப்பாறி ஆறுதல் படுத்திகொண்டு  ,
ஆகாயத்தில் மீண்டும் பறப்போம் 
நமக்கான சுதந்திரத்துடன் .


        இணையாமல் இணைந்தே செல்லும் தண்டவாளம் ஒரு புள்ளியில் சந்தித்து மீண்டும் இணையாமல் இணைந்தே செல்வது போல் ---நட்பு .

~ சோனா கிரண்

நீர்க்குமிழி வாழ்க்கை --- பூ மனம் !

இழப்பதற்கு இனிஎதுவுமில்லை
நீர்க்குமிழியாய்தோன்றி
மறையும்சின்ன சின்ன...
சந்தோசங்களை தவிர

எதிர்பாரா வெள்ளம் அடித்து சென்ற
மிச்சத்தில் இன்னும் சில இனியநினைவுகள்
தெளிந்த நீரோடையாய்
பூவின் மெல்லிய மனம்

புயலில் வீழாமல்
தாங்கி பிடித்த ...நட்பிற்கு நன்றி @Mony